districts

img

சென்னையில் மிக உயரமான எழில்மிகு கிறிஸ்துமஸ் மரம்

சென்னை, டிச.18- சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலய நகரில் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.  30 அடி உயர கிறிஸ்து மஸ் மரம், வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. இந்நிகழ்ச்சியை சென்னை- மயிலாப்பூர் பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி துவக்கி வைத்தார். சாந்தோம் தேவாலய பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.  கிறிஸ்துமஸ் மரம்  அன்பின் அடையாளமாகவும், மற்றவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை கொண்டு வரவும்  உதவும் என்று அந்தோணிசாமி கூறினார். சென்னையில் பண்டிகை அலங்காரத்தில் புகழ்பெற்ற டீம் சாண்டா ஸ்டோர்ஸால் இந்த மரம்  வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டதோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர்.