districts

img

சூரிய சக்தியில் ‘இ’ஸ்கூட்டர் அசத்திய அதியமான் கல்லூரி மாணவர்கள்

கிருஷ்ணகிரி, டிச.2 -  தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு அதியமான் பொறியியல் தன்னாட்சி கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.இத்துறை யின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவர்கள் வடிவமைத்திருந்த சூரிய சக்தியில் இயங்கும் ‘இ ஸ்கூட்டர்’ காட்சிப்படுத்தி செயல் விளக்கம் அளித்த னர். இ ஸ்கூட்டர் தயாரிப்பு மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரியின் தலைவர் ஜி.ரங்கநாத், முனைவர்கள் வெங்க டேசன், செல்வம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த முன்மாதிரி செயல் விளக்கத்தின் போது துறைத் தலைவர் முனைவர் பி.பெருமாள்,பேராசிரியர் முனைவர் கே.செந்தில் உடன் இருந்தனர். துறையின் உதவி பேராசிரி யர் கார்த்திகேயன் இந்த  திட்டத்திற்கு வழிகாட்டினார்.