districts

மெரினா கடல் அலையில் சிக்கி மாணவர் பலி

சென்னை,ஆக.21-

       கோடம்பாக்கத்தை சேர்ந்த அருள் (14) என்ற  மாணவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அருள்  தனது நண்பர்கள் யோகேஸ் வரன், தர்ஷன் ஆகியோரு டன் மெரினா 3 பேரும் குளித்து விளையாடினர். அப்போது வந்த ராட்சத அலையில் அவர்களை சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.  

      மாணவர்கள் கூச்சல்  போடுவதை பார்த்து பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  

     மீட்பு படையினர் அந்த பகுதியில் தேடிய போது யோகேஸ்வரனும் தர்ஷனும் கடல் அலை யில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள்  இருவரையும் மீட்டனர். அருள் மட்டும் காண வில்லை. மாணவரை கட லோர காவல் படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடினர். ஆனால் அருள் கிடைக்க வில்லை.

      இந்த நிலையில் அருள்  உடல் மெரினா கடற்கரை  பகுதியில் திங்களன்று ஒதுங்கியதை கடலோர காவல் படையினர் கண்டெ டுத்து  ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.