districts

img

கிக்-பாக்ஸிங் வீராங்கனை  நிவேதாவிற்கு நிதியுதவி

சென்னை, அக்.2-   தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இந்திய கிக் பாக்ஸிங் சேம்பியனான நிவேதா சீனிவாசனுக்கு காசா கிராண்டு நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.  வேர்ல்டு சில்ட்ரன், கேடெட்ஸ் ,  ஜூனியர்ஸ் கிக்பாக்ஸிங் சேம்பியன்ஷிப் 2022 போட்டித்தொடரில் இந்த இளம் வீராங்கனை பங்கேற்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் காசாகிராண்டு அஸ்பையரிங் ஸ்டார்ஸ் என்ற தனது வருடாந்திர செயல்திட்டத்தின் கீழ், இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.   காசாகிராண்டு சந்தையிடல் பிரிவு துணைத்தலைவர்  விமேஷ், ரூ.2.65 லட்சம் என்ற ஸ்பான்சர்ஷிப் தொகைக்கான காசோலையை கிக் பாக்ஸிங் வீராங்கனை நிவேதாவிற்கு வழங்கினார். போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான அவரது பயணம், இவ்விளையாட்டிற்கான சாதனங்களது தொகுப்பு மற்றும் தொடர்புடைய பல்வேறு செலவுகளை எதிர்கொள்ள இந்த ஸ்பான்சர்ஷிப் தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;