districts

img

சாதியை ஒழிக்காமல் சோசலிசம் வராது சுதந்திர தின கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

சென்னை, ஆக.12 - சாதியை ஒழிக்காமல் சோசலிசம் வராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார். 75வது சுதந்திர தினத் தையொட்டி வியாழனன்று (ஆக.11) புஷ்பா நகரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடு தலைப்போராட்ட பாரம் பரியத்தையும், அதன் அரசியலையும் சுட்டிக்காட்டி பேசிய டி.கே.ரங்கராஜன், நிலபிரபுத்துவத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க  முடியாது. சாதியை ஒழிக்கா மல் சோசலிசம் வராது  என்பதால் நிலச்சீர்திருத்தத் திற்காக கம்யூனிஸ்ட்டுகள் போராடினர். நிலபிரபுக்கள், ஜமீன்தார்கள், மன்னர்களை எதிர்த்து நின்றனர். நூற்றுக் கணக்கானோரை உயிர் பலி கொடுத்தனர் என்றார். நிலபிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்கள் முத லாளித்துவ அமைப்பிலும் தொடர்கிறது. மார்க்சிஸ்ட்  கட்சியின் பணிகளில் ஒரு பகுதியை திராவிட இயக்கம் செய்கிறது. எனவே, ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக, பள்ளி பாடப் புத்தகங்களில் நிலப்பிரபுத்துவம் குறித்த பாடங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விடுதலைப் போராட்ட த்தை அனைத்து மொழி, சாதி, மதங்களை சார்ந்த வர்களும் இணைந்து நடத்தி னர். எனவேதான், மதச்சார் பற்ற நாடு என்ற கோட்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொண்டனர். இதற் கெதிராக ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கோட்பாட்டை வலியுறுத்துகிறது. தற்போது அக்னிபாத் என்ற பயிற்சி பெற்ற தாக்கு தல் படையை உருவாக்குகி றது. எனவே, மதச்சார் பின்மையை பாதுகாக்கும் போராட்டத்தில் கடும் அடக்கு முறைகளை எதிர்  கொள்ள நேரிடும். அரசியல மைப்பு சட்டத்தை பாது காக்க கருத்தியல் ரீதியான, வலுவான ஒற்றுமையும் தேவை. இந்த ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

நா.எழிலன்
ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் நா.எழிலன்  பேசுகையில், சிங்காரவேலர் வழிகாட்டல்படி ஜமத்கனி,  ‘மிகைமதிப்பு’, ‘மூலதனம்’  நூல்களை மொழிபெயர்த் தார். அவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன் றைய வேலூர் மாவட்டத்தின் முதல் செயலாளர். பகுத் தறிவோடு சிந்தித்தால்தான் புரட்சி வரும். பொதுவுட மையின் முதல்படியே பகுத்தறிவு என்பதால் ஜமதக்கனி எழுதுவதில் முனைப்பு காட்டினார் என்றார். பொதுவுடமை மற்றும் திராவிட சித்தாந்தங்கள் மனிதனை மனிதாக பார்க் கின்றன. ஆனால் ஆர்எஸ் எஸ் சித்தாந்தம் மனிதனை மிருகமாக பார்க்கிறது. ஒரே மொழி, மொழி, வரி  என்பவர்கள் ஒரே சாதி, ஒரே  கடவுள் என்று சொல்ல மாட்டார்கள் என்றார் அவர்.

விடுதலை போராட்ட வாரிசுகள்
கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வெ.இரவீந்திரபாரதி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். விடுதலை போராட்ட வீரர்கள் தோழர் பி.ராமமுர்த்தியின் மகள் வழக்கறிஞர் ஆர்.வைகை, தோழர் பி.சீனிவாசராவின் மகன் பி.எஸ்.ராஜசேகர், அஞ்ச லையம்மாள், ஜமதக்கனி யின் குடும்பத்தை சேர்ந்த டாக்டர் நா.எழிலன் ஆகி யோரை டி.கே.ரங்கராஜன் கவுரவித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வெ. தனலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப் பிரமணியம், பகுதிக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சுதந்திர தின பூங்கா அருகிலிருந்து பகுதிக்குழு உறுப்பினர் பி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற சுடர் பயணத்தை, மூத்த தலை வர் பி.சந்திரசேகர் தொடங்கி வைத்தார். சுடரை  பகுதிக்குழு உறுப்பினர் எம்.விஜயா பெற்றுக் கொண்டார்.

;