districts

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 பேர் சாவு: ஆக்ஸிஜன் தட்டுப்பாடா?

கடலூர், மே 10- கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் ஒரே நாளில் 6 பேர் உயிரி ழந்துள்ளனர். இவர்களின் இறப்புக்கு  ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் கார ணமா என்ற சந்தேகம் எழுப்பப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின்  தாக்கம் அதிகரித்து காணப்படு கிறது. முதல் அலையின் போது  கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இறப்பு குறைவாக  இருந்தது. தற்போது இறப்பின்  வேகம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை  கடந்த நிலையில் இறப்பு எண் ணிக்கையும் 350 கடந்து விட்டது. குறிப்பாக மே 4ஆம் தேதி முதல்  8ஆம் தேதி வரை 28 பேர் கொரோனா விற்கு பலியாகி உள்ளனர். இதில், மே 8ஆம் தேதி (சனிக்கிழமை) 9 பேர் இறந்த நிலையில் அவர்களில் 6 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். தற்போது, பிராண வாயு (ஆக்சிஜன்) தட்டுப்பாடு ஏற்  பட்டுள்ள நிலையில் மருத்துவ மனையில் பிராணவாயு தட்டுப்பாட்டி னால் 6 பேர் இறந்தனரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து, மருத்துவப் பணி கள் இணை இயக்குநர் பி.என்.ரமேஷ்பாபு கூறுகையில், கடலூர்  அரசு தலைமை மருத்துவமனை யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வில்லை. 6 கிலோ லிட்டர் கொள்ளவு கொண்ட திரவ நிலையிலான பிராண வாயு சேமிக்கும் கலன் மருத்துவ மனையில் உள்ளது. 168 படுக்கைகள் பிராணவாயுடன் இணைக்கப்பட்டு உள்ளன. தினசரி 3 கிலோ லிட்டர் வரையில் நாம் ஆக்சிஜனை பயன்  படுத்துகிறோம்.

இதனால், மீத முள்ள 3 கிலோ லிட்டரில் 1.5 கிலோ  லிட்டரை மட்டுமே பயன்படுத்த முடி யும். மற்றவை இருப்பாக மட்டுமே  வைத்திருக்க முடியும். தேவையான  ஆக்சிஜன் தினசரி வந்து கொண்டி ருக்கிறது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. பெரும்பாலும் வயதானவர்கள், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் கடைசி நேரத்தில் தான் மருத்துவமனையை அணுகுகின்றனர். அவர்கள் காய்ச் சல், சளி இருக்கும் போது மருத்துவ மனையை அணுகுவது கிடையாது.  அவை தீவிரமடைந்து மூச்சுத்திணறல்  ஏற்படும் போது மருத்துவமனைக்கு வரும் போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடி யாத நிலை ஏற்படுகிறது. இதுவே அதிகமான இறப்பிற்கு காரணம். 80 சதவீதத்திற்கு மேல் நுரையீரலில் பாதிப்பு கொண்டவர்களே அதிக மாக மருத்துவமனையை நாடுவ தால் எங்களால் எதுவும் செய்ய முடிய வில்லை. எனவே, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உட னடியாக கொரோனா பரிசோதனை  செய்துகொண்டு ஆரம்பக் கட்டத்தி லேயே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றால் உயிரி ழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள லாம். அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவை தீவிரமான பின்பு மருத்துவமனைக்கு வருபவர் களை காப்பாற்றுவதற்கு அதிகமான சிரமங்களை மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது என்றார்.

;