districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம். வி. கிருஷ்ணனின் பேரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம். வி. கிருஷ்ணனின் பேரன் பி. சித்தார்த், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமாரின் மகள் காயத்ரி ஆகியோரது திருமணம் ஞாயிறன்று (ஜன.28) சென்னையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் டி. கே. ரங்கராஜன் திருமணத்தை நடத்தி வைத்தார். மூத்த தலைவர் வே. மீனாட்சிசுந்தரம், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எல். சுந்தரராஜன் (வடசென்னை), ஆர். வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.