districts

img

வரி செலுத்தாத கல்லூரிக்கு சீல்

கடலூர், மார்ச் 12- கடலூர் செம்மண்டலம் பகுதியில் கந்த சாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலை யில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆகவும் சுயநிதி கல்லூரி ஆகவும் இரண்டு ஷிப்டு களில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கடந்த 2018 ஆம் ஆண்டு இதுவரையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்த வில்லை. ரூ.36 லட்ச வரி பாக்கியை கேட்டு கடந்த ஆறு மாதமாக மாநகராட்சி சார்பில் பல நோட்டீசுகள் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்ப தாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறி வந்த னர். இதனை அடுத்து செவ்வாயன்று மாநக ராட்சி அதிகாரிகள் கல்லூரியின் முதல்வர் அறைக்கும், கல்லூரியின் அலு வலகத்திற்கும் திடீரென சீல் வைத்தனர்.  அடுத்த வாரம் கல்லூரியின் பருவத் தேர்வுகளும் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அலு வலகத்திற்கு சீல் வைத்ததால் செய்வதறி யாது ஊழியர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்திருந்தனர். கல்லூரி நிர்வாகம் மாநகராட்சி அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் வரி கட்டு வதாக உறுதி அளித்ததன் பேரில் உடனடி யாக சீல் அகற்றப்பட்டது.