districts

img

ஊதியத்தை சுரண்டும் தனியார் நிறுவனம்

கடலூர், அக்.10- கடலூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்கு சிட்டி கிளின் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.  தூய்மை பணியாளர் ஒருவருக்கு மாநகராட்சியிடமிருந்து ரூ.480 சம்ப ளத்தை பெற்றுக் கொண்டு தூய்மை பணி யாளர்களுக்கு ரூ.270 வரைதான் அந்நிறுவனம் வழங்குகிறது. மாநகராட்சியில் 45 வார்டுகளை 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் 380 தூய்மை பணியாளர்கள் சிட்டி கிளின் நிறுவனத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியமும் முறையாக வழங்குவதில்லை என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டும் அது வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணி யாற்றி வரும் இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.270 என்ற அடிப்படையில் மாத  சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 4 மாதங்களாக  முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் அந்த தொகையில் பிஎப், கிராஜுவிட்டி பிடித்தம் செய்யும் பணத்தையும் முறை யாக கட்டுவதில்லை என்றும்,  மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள  சிட்டி கிளீன் மேற்பார்வையாளரிடம் பலமுறை  எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  பணி களை புறக்கணித்து கடலூரில் 11 இடங்க ளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அக்டோபர் 9ஆம் தேதி தூய்மை பணி யாளர்கள் ஆணையத்தின் தேசிய தலை வர் வெங்கடேசன் கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்  நடத்தினார், அதில் தூய்மைப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் குறித்து கூறிய நிலையில் அந்த சம்பளம் இதுவரையிலும் வழங்கப்படவில்லை, எங்களின் சம்பளம் எவ்வளவு? என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.