திருவள்ளூர், ஏப்.17- அரக்கோணம் மக்கள வைத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் திருத்தணி மற்றும் பள்ளிப் பட்டு பகுதியில் செவ்வா யன்று (ஏப் 16), கிராமங்கள் தோறும் சென்று வாக்கு களை சேகரித்தார். திருத்தணி சட்டமன்ற தொகுதியில் சூரியநகரம், இஸ்லாம் நகர், கிருஷ்ண சமுத்திரம், ராமசமுத்திரம், பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீச்ச லம், நெடுங்கல், ஐங்காலப் பள்ளி, பாண்டரவேடு, கேசவ ராஜகுப்பம் கரிம்பேடு, கொளத்தூர், ஈச்சம்பாடி, சோளிங்கர் ரோடு, வெளியகரம், திரு மலைராஜபேட்டை, குமார ராஜ்பேட்டை, எஸ்கேஆர் பேட்டை, கோணசமுத்திரம், கர்லம்பாக்கம், நொச்சிலி கிருஷ்ணராஜகுப்பம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன், எம்எல்ஏ, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் பூபதி, விசிக மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.பன்னீர் செலவம், கே.ராஜேந்திரன், சி.பெருமாள், வட்டச் செய லாளர் சிவபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.