districts

img

காவல்துறை துணையோடு ரூ. 5 லட்சம் பறிப்பு: விழுப்புரத்தில் தீக்குளிக்க முயற்சித்த தம்பதி

விழுப்புரம், மே 9- கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறிப்பததால் மனமுடைந்த விவசாயி தனது மனைவியுடன் விழுப் புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற் சித்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தில்  வசிப்பவர் ஜெயராமன் மகன் ராஜூ. ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவரது மனைவி ராணி ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இரு வரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது,  தங்களது நிலத்தின் அருகில் குடியிருக்கும் தசரதன் (75) என்பவர் மது போதையில் தினமும்  வாய்த்தகறாறு செய்வார். மேலும், அவரது நிலத்தின் வழிக்காக எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்கும்படி தொந்தரவு கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி எங்கள் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மரத்தில் தசரதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு நாங்கள் தான் காரணம் என்று கூறி,  அவரது பிள்ளைகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், தற்கொலை செய்துகொண்டவரை நாங்கள்தான் கொலை செய் தோம் என்றும் அவலூர் பேட்டை காவல் நிலைய துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்து ரூ.5 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டனர். எங்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த சமூக விரோத கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களிடம் பறிக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.