districts

ஒரே நாளில் ரூ. 35 குறைந்த தக்காளி விலை

சென்னை, மே 25 - சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் புதனன்று (மே 25) ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாயன்று  90 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி புதனன்று ஒரே நாளில் கிலோ 35 ரூபாய் குறைந்து 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ  தக்காளி 65 ரூபாய் முதல் 75 ரூபாய்  விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் புதன்கிழமை விலை நிலவரம் வெங்காயம் ரூ. 18, நவீன் தக்காளி ரூ. 60, நாட்டு தக்காளி ரூ. 55, உருளைக்கிழங்கு 22 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை, சின்ன  வெங்காயம் ரூ. 25 முதல்  40 வரை, ஊட்டி கேரட் ரூ. 25  முதல் 30 வரை, பீன்ஸ் ரூ. 70 முதல் 80 வரை, பீட்ரூட். ஊட்டி ரூ. 40  முதல் 45 வரை, கர்நாடகா பீட்ரூட் ரூ. 30, சவ்சவ் ரூ. 18, முள்ளங்கி ரூ. 18, முட்டைகோஸ் ரூ. 25 முதல் 30 வரை,  வெண்டைக்காய் ரூ. 30 முதல் 50 வரை, உஜாலா கத்தரிக்காய்  ரூ. 30 முதல் 35 வரை, வரி கத்திரிக்காய் ரூ. 25 முதல் 30 வரை,  காராமணி ரூ. 40, பாகற்காய் ரூ. 40 முதல் 50 வரை, புடலங்காய் ரூ. 15 முதல் 20 வரை, சுரக்காய் ரூ. 20 முதல் 30 வரை, சேனைக்கிழங்கு ரூ. 22, முருங்கைக்காய் ரூ. 50 முதல் 60 வரை. சேனைக்கிழங்கு ரூ. 35 முதல் 40 வரை, காலிபிளவர் ரூ. 25 முதல் 30 வரை, வெள்ளரிக்காய் ரூ. 15, பச்சை மிளகாய் ரூ. 15, பட்டாணி ரூ. 170 முதல் 180 வரை, இஞ்சி ரூ. 40, பூண்டு ரூ. 50 முதல் 130 வரை, அவரைக்காய் ரூ. 60 முதல் 75 வரை, மஞ்சள் பூசணி ரூ. 15,  வெள்ளை பூசணி ரூ. 15, பீர்க்கங்காய் ரூ. 40, எலுமிச்சை ரூ. 50 முதல் 80 வரை, கோவைக்காய் ரூ. 25 முதல் 30 வரை,  கொத்தவரங்காய் ரூ. 25, வாழைக்காய் ரூ. 7, வாழைத்தண்டு மரம் ரூ. 40, வாழைப்பூ ரூ. 20, பச்சை குடைமிளகாய் ரூ. 40  முதல் 50 வரை, வண்ண குடைமிளகாய் ரூ. 100, கொத்தமல்லி ரூ. 12, புதினா ரூ. 3, கருவேப்பிலை ரூ. 14, அனைத்து கீரை ரூ. 8, தேங்காய் ரூ. 30, மாங்காய் ரூ. 18 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டது.

;