districts

கொரோனாவில் இறந்த சுகாதார ஊழியர்கள் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு

விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி, ஜூன். 3- கொரோனா தொற்றால் இறந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று  காலத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தா மல் மக்களின் மருத்துவ நலன் காக்க கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பணி யில் ஈடுபட்ட புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழி யர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தனர். இறந்த சுகாதாரத் துறை ஊழியர்களின் குடும்பத்திற்கு, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் காப்பீடு திட்டத்தின் கீழ்  50 லட்ச  ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி மே  மாதம் 2021 வரை இறந்த 11 பணியாளர்களின்  குடும்பத்தாருக்கு மேற்கண்ட திட்டத்தின்  கீழ் இழப்பீடு தொகைக்காக விண்ணப்பிக் கப்பட்டிருந்தது. அதில் 5 சுகாதார பணியாளர்களின் குடும்  பத்தாருக்கு தலா 50 லட்ச ரூபாய் வழங்கப்  பட்டது.

இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு தொகைக்காக விண்ணப்பிக்காத  கொரோனா  தொற்றால் உயிரிழந்த சுகாதார பணியாளர்க ளின் குடும்பத்தார் யாரேனும் இருந்தால், சுகாதார பணியாளர்களின் பெயர்,வங்கி கணக்கின் விபரம், நியமிக்கப்பட்டவர் (நாமினி) விபரம்,  பணி இடம் ,இறப்பு சான்றி தழ் ஆகியவற்றை உடனடியாக சமர்ப்பிக்க  சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள் ளது. புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் காப்பீடு திட்டத்தின் சிறப்பு அதிகாரி யாக ரத்தின கிஷோர், திட்ட அதிகாரியாக டாக்டர்.அனந்தலட்சுமி ஆகியோரை புதுச்சேரி சுகாதாரத்துறை செயளாலர் டாக்டர்  அருண் நியமித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;