திருவண்ணாமலை,அக்.17- 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் எனக் கோரி சாலைப் பணியாளர்கள் திரு வண்ணாமலை நெடுஞ் சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும், 4000க்கும் மேற்பட்ட பணி யிடங்களை பாதுகாத்து, கிராமப்புற இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பை உறுதிபடுத்தவேண்டும், சாலைப் பணியா ளர்கள் ஊதி யத்தில் 10 விழுக்காடு ஆபத்துப்படி, சீருடை சலவைப் படி, நிரந்தர பயணப்படி, வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் முருகன் தலைமை யில் நில அளவை துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜா துவக்க உரை யாற்றினார். கோட்டச் செயலாளர் ஏழு மலை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மாவட்டச் செய லாளர் ரகுபதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்திபன் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பரிதிமாற் கலைஞர், துறை சங்க நிர்வாகிகள் ஜி.ராஜா, எஸ். முரளி, நந்தினி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநில செயலாளர் எம்.மகா தேவன் நிறையுரையாற்றி னார். கோட்ட பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.