மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளான புதனன்று (அக்.2) சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர், ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ் குமார், எம்.சரஸ்வதி எம்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.