காலமானார் சென்னை, ஆக. 9 - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாத்தின் தாயார் ரேணுகா கிருஷ்ணன் வெள்ளியன்று (ஆக.9) காலமானார். அவருக்கு வயது 86. அன்னாரது உடல் எண்.6ஏ/32, முத்துகிருஷ்ணன் தெரு, கச்சேரி சாலை அருகில், மயிலாப்பூர், சென்னை என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடல் சனிக் கிழமைன்று (ஆக.10) பிற்பகல் 3 மணி அளவில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.