districts

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி, பிப்.15- புதுவை கிழக்கு கடற்கரை சாலையையும்,  லாஸ்பேட்டை பிரதான சாலையை இணைக்கும் வகையில் கொட்டுப்பாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் தெரு உள்ளது. செல்வ விநாயகர் கோவில் தெரு, லாஸ்பேட்டை பிரதான தெரு முழுவதும் ஆக்கிரமி ப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. லாஸ் பேட்டை பிரதான சாலையிலுள்ள கடைகளின் விளம்பர பலகைகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  கடைகளையும் சாலையில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். லாஸ்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இருந்து நாள்தோறும் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு இந்த வழியில் தான் செல்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு விபத்தும் நடந்தது. இதை கருத்தில்கொண்டு நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து புதுவை காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம், பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலுக்கு மேல் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. லாஸ்பேட்டை மெயின்ரோடு முதல் விமான நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.