districts

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பார்வைத்திறனற்ற நபருக்கு மறுவாழ்வு

சென்னை, ஆக.4- 37 வயதாகின்ற செந்தில்முருகன் என்ப வர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத் திறன் பாதிப்புள்ள ஒரு ஆசிரிய ராவார்.   கடந்த ஆண்டு கோவிட் – 19 தொற்றுக்கு  இவர் ஆளானார். அதிர்ஷ்டவசமாக அந்த  வைரஸ் தொற்றிலிருந்து இவர் மீண்டு விட்டார். எனினும், முக்கோர்மைகோசிஸ் என  அழைக்கப்படுகின்ற கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது பற்கள்  மற்றும் தாடை எலும்புகள் நொறுங்கிவிட்ட தால், உணவு சாப்பிடவோ அல்லது பேசவோ இயலாதவராக இவர் மாறிவிட்டார்.  

இம்பிளாண்ட்ரி இன்டர்நேஷனல் டென்டல் மருத்துவமனையில், அவருக்கு கன்ன எலும்பில்  உட்பொருத்தி  அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததன் மூலம்  வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க இவருக்கு உதவியிருக்கிறது.  இப்பாதிப்பு நிலைக்கான சிகிச்சை நேர்வு குறித்து, இம்ப்ளாண்ட்ரியின் முதுநிலை மருத்துவரும், மறுசீரமைப்பில் சிறப்பு திறன்  கொண்டு, உலகளவில் புகழ்பெற்ற உட்  பொருத்தி சிகிச்சை நிபுணருமான பேராசிரி யர் டாக்டர். ஜான்சன் ராஜா ஜேம்ஸ் கூறுகை யில் பற்களையும் மற்றும் தாடை எலும்பை யும் அகற்றுகின்ற அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால்,  இவரது மேற்புற தாடையில் ஒரு மிகப்பெரிய குழி உருவானதால், சாப்பிடவும், பேசவும் கடும் சிரமம் இவருக்கு ஏற்பட்டது.

 உண்ணும்  உணவு வயிற்றுக்குப் போவதற்குப் பதிலாக, மூக்கிற்கு சென்றதால், சாப்பிடுவதே பெரும் பிரச்சனையாகிவிட்டது மேலண்ணம் இல்லாத காரணத்தால் பேசவும் இவரால் முடியவில்லை.   சென்னையில் சாலிகிராமத்தில் அமைந் துள்ள இம்பிளாண்ட்ரி இன்டர்நேஷனல் டென்டல் மருத்துவமனைக்கு மோசமான நிலையில் வந்த அவருக்கு மருத்துவர்கள் கன்ன எலும்பில் துளையிடப்பட்டு, பல் சீர மைப்பு சிகிச்சை அளித்தனர் என்றார் ஜான்சன்.  டாக்டர். ஜான் நேசன்  டாக்டர். ஸ்ரீ  லட்சுமி மிதுன், டாக்டர். அஃப்ரீன் மற்றும் டாக்டர். ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய பல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழுவால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

;