கிருஷ்ணகிரி, ஜன.27 – மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டு பேரணியில் கலந்து கொள்வதற்கான செம்படை வீரர்கள் அமைப்பு கூட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. தளி ஒன்றிய செயலாளர் நடராஜ்,செயற்குழு உறுப்பினர்கள் சேகர், பிரகாஷ்,சிபி.ஜெயராமன், தேன்கனிக் கோட்டை வட்டத்தின் மூத்த தலைவர் நாகராஜ்ரெட்டி,இளம் தலைவர் புரு ஷோத்தமரெட்டி,இடைக் குழு செயலாளர் ராஜா ஒன்றிய குழு உறுப்பினர் அனுமப்பா மாவட்ட குழு உறுப்பினர் இளவரசன் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதுமிருந்து 300 செந்தொண்டர்கள் அகில இந்திய மாநாட்டு முன்னணிப்படையான செந்தொண்டர் அணி வகுப்பில் கலந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் எக்ஸ். இருதயராஜ் கூறினார்.