districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

ராணிப்பேட்டை, ஆக. 19 -  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு கோட்டை உட்புறத்தில் உள்ள பகுதி களில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சனிக்கிழ மையன்று (ஆக. 19)  செய்யார் பைபாஸ் சாலையில் உள்ள டெல்லி கேட் அருகே  சாலை மறியல் ஈடுபட்டனர்.   அப்போது அந்த வழியாக சென்ற டிஐஜி முத்துசாமி பொது மக்களிடம் நேரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  உரிய நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதியளித்தார். பிறகு மக்கள் கூட்டம் கலைந்து சென்றனர்.