அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்டக்குழு சார்பில் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி முத்துக்கடை பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிறன்று (ஏப். 7) மாவட்ட செயலாளர் என். காசிநாதன் தலைமையில்வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.இதில் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.