districts

img

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்

திருவொற்றியூர்,அக்.7-  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.  இந்த பணி இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் அந்த பள்ளங்கள் அப்படியே உள்ளன. மேலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 3  நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான  இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளன.  வியாழனன்று நள்ளிரவும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, மணலி, சின்ன சேக்காடு, மாத வரம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர், ஜோதி நகர் கார்கில் நகர் மணலி விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல்  தேங்கி உள்ளன. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை வெள்ளம்  வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்  பணி முடிவடையாததால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்  சாட்டினர்.

இதற்கிடையே மழை நீரை  வெளியேற்றும் பணியில் மாநக ராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார் கள். ஜே.சி.பி.எந்திரம் மூலம் அடைப்புகளை பெயர்த்து மழை நீரை பக்கிங்காம் கால்வாயில் வெளி யேற்றும் பணி நடந்து வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்பே சிறிய மழைக்கே வீடுகளை தண்ணீர் மிதக்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணியை முடிக்காததே இதற்கு காரணம். இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் வட சென்னையின்  நிலைமை மிகவும் மோசமாகி விடும்.  எனவே மழைநீர் கால்வாய் பணிகளை  விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் கனமழை காரணமாக புது வண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் மழை நீர் குளம்போல் தேங்கி  நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி ஆளாகிவருகின்றனர்.

;