சென்னை, மே 4 - கல்குவாரி தொழிலாளி லட்சுமி (வயது 83) வயது மூப்பின் காரணமாக சனிக் கிழமையன்று (மே 3) கால மானார். சென்னை மாநகராட் சிக்கு சொந்தமான பல்லா வரம் கல்குவாரியில் 200 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தலித் தொழி லாளர்கள் மிக குறைந்த கூலியில் வேலை செய்து வந்தனர். அவசர நிலை அமலில் இருந்த 1976ஆம் ஆண்டு சிஐடியு சங்கம் அமைத்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை நடத்தியது. இந்த போராட்டத்தில் முன்னின்ற லட்சுமியின், இரண்டு சகோதரிகள், இரண்டு கர்ப்பிணிகள் உள்ளிட்டு 14 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தவர்களை ஜாமின் எடுக்க தனது நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்தவர் லட்சுமி. பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பல்லா வரம் தொகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மூத்த தொழிற்சங்கத் தலைவர் எஸ்.குமாரதாசன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.