கடலூர்,ஜூன்.15- கடலூர் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர் அலுவல கங்களில் பொதுவிநியோ கத் திட்ட குறை கேட்பு முகாம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 10 வட்டங்களிலும் வட்டாட்சி யர் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்ட குறை கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடந்த முகாமிற்கு குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதுநிலை வரு வாய் ஆய்வாளர் ரம்யா, இளநிலை வருவாய் ஆய் வாளர் இளம்பிறை, வருவாய் ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய ரேசன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் அனைத்துக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.