districts

கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் வழங்குவதில் சிக்கல்

விழுப்புரம், ஆக. 18- விவசாய கடன் வழங்குவதில் சிக்கல்கள்  ஏற்பட்டு உள்ளதாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் உள்ள கூட்டு றவு இணைப்பதிவாளரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் தலைமையில் கோரிக்கை மனு அளித்துள்ளார். விவசாயிகளை கந்து வட்டியில் இருந்து மீட்பதற்கு கூட்டுறவுத் துறையின் செயல்பாடு மிகவும் இன்றியமையாதது, ஆனால் விவசாயிகள் கடன் கேட்டு தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகும் போது, ஏராளமான நடைமுறை சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வரு கின்றனர்,

 காத்திருப்பு,அலைகழிப்பு என பல  வகையான பிரச்சனைகள் உள்ளன, தற்சம யம் தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளு படி செய்துள்ளது, மீண்டும் விவசாயிகள் கடன்  கேட்டு செல்கிறபோது மற்ற வங்கிகளில் கடன்  இல்லை என சான்று கேட்டு அலைக்கழிக்கப் படுகின்றனர், ஆனால் தொடர்ந்து கூட்டுறவு  சங்கங்களில் கடன் பெற்று வரும் விவசாயி களை அலைக்கழிக்கச்செய்வது நியாய மற்றது, தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் கடன்  பெறுபவர்கள் கடன் இல்லை என சான்று  கோருவது தேவையற்ற தாகும். இது ஒரு புறமிருக்க கடன் பெற்ற விவசாயிகளின் பணத்தை ஒரு பகுதி மத்திய கூட்டுறவு வங்கி  கணக்கில் வரவு வைக்கப்படுகிறது,

மீதி பணம் உரத்திற்கு என்று சம்பந்தப்பட்ட கூட்டு றவு கடன் சங்கத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது, ஆனால் அந்த பணத்துக்கான உரத்தை  உரிய காலத்தில், விவசாயிகளுக்கு தேவைப்படும் போது கொடுக்காமல்  இழுத்தடிக்கின்றனர்.   குறிப்பாக விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இப்படிப்  பட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது, எனவே விவசாயிகள்  கடன் கேட்கிறபோது அலைகழிப்பு இல்லாமல் கடன் வழங்க வேண்டும், மேலும் உரிய  காலத்தில் உரத்தை வழங்க வேண்டும், அப்படி காலதாமதம் ஏற்படும் போது உரத்திற்  கான உரிய பணத்தை விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ள னர்.

;