districts

img

சோழிங்கநல்லூர் தொகுதியில் 2 ஆயிரம் பேருக்கு பட்டா

சென்னை, ஜூலை 24 - சோழிங்கநல்லூர் தொகுதியில் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிவுரையின் அடிப்படையில் 28 ஆயிரத்து  848 பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீலாங்கரையில் ஆயிரத்து 984 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜூலை 24)  நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கி பேசுகை யில், சோழிங்கநல்லூர் பகுதியில் சுமார் 2  ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளது. மாதவரம் மற்றும் அருகாமை யில் உள்ள தொகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 124 பேருக்கு ஏற்கெனவே பட்டா வழங்கியுள்ளோம் என்றார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் அவர்  கூறினார். இந்த விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்  ரமேஷ், மருத்துவர் நா.எழிலன், காரப் பாக்கம் கணபதி,  ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.