districts

img

துல்லியமான இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகம்

சென்னை, ஜூன் 14-

     சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு பகுதியில் அதிநவீன முறையாக 360  டிகிரி கோணத்தில் துல்லி யமான அறுவை சிகிச்சை செய்ய உதவும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதனை எஸ்ஆர்எம் குழும தலைவர் ரவி பச்ச முத்துமற்றும் மருத்துவ மனையின் முடநீக்கியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் பி.சூர்யநாராயணன் ஆகியோர் அறிமுகம் செய்து  வைத்த பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  

    சிம்ஸ் மருத்துவ மனையில் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைகளில் பல்வேறு நவீன மருத்துவ  முறைகளும், சாதனங்களும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன.

   அதன் தொடர்ச்சியாக உயர் நுட்ப சிகாகோ ஹிப் பிரசர்வேஷன் சர்வீஸ், நவிவிஸ் சிஸ்டம், கஸ்டம் டாக்கிங் ஆக்மென்ட் டெக்னாேலஜி மற்றும் பாலிமோஷன் அட்வான்ஸ் ஹிப் ரிசர்ஃபேசிங் சிஸ்டம்  என்ற 4 வகையான அதிநவீன தொழில்நுட்பங்கள் சிம்ஸ் மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்  மூலம் அறுவை சிகிச்சை யின் போது, துல்லியமாக சில உபகரணங்களை உடலுக் குள் பொருத்த முடியும். அதேபோல், 360டிகிரி கோணத்தில் இடுப்பு மூட்டு  பகுதியில் சிகிச்சை  அளிக்கலாம்.

    நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய உயர் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை சிம்ஸ் மருத்துவமனையில் அறி முகப்படுத்த ப்பட்டுள்ளது. மருத்துவ உலகிலும், குறிப் பாக முடநீக்கியல் துறையி லும் இது ஒரு மைல்கல் ஆகும் என அவர்கள் தெரி வித்தனர். பேட்டியின் போது  மருத்துவர்கள் பிரசாத், விஜய் சி போஸ், கிறிஸ்டி யன் காலமீ, பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்த னர்.