districts

img

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை

சென்னை, ஜன. 23- சென்னையில் இன்று  பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கே.கே நகர் , ராமசாமி சாலை பகுதிக்குட்பட்ட கே.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு வடபழனி, ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அழகிரி நகர், கே.கே நகர் பகுதி (1 லிருந்து 12 பிரிவு), ராஜமன்னார் சாலை, நேசப்பாக்கம் பகுதி, கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை (கே.கே நகர்) உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கிண்டி பகுதி: ராஜ்பவன் பகுதிக்குட்பட்ட வண்டிகார தெரு முதல் பகுதி, பெரியார் நகர் முதல் பகுதி, நேரு நகர் 1வது பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி மரியபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி, மாங்காளியம்மன் கோயில் தெரு, கேளப்பாக்கம் பகுதி தர்மராஜபுரம், கிருகம்பாக்கம் ராமபுரம் பகுதி கோகில கார்டன், வள்ளுவர் சாலை (பகுதி), பஜனை கோயில் தெரு, நடேசன் நகர் டி.ஜி நகர் பகுதி பழவந்தாங்கல் பகுதி, பி.வி நகர், புழுதிவாக்கம் பகுதி மேடவாக்கம் மெயின் ரோடு, திரௌபதியம்மன் கோயில் தெரு,ஆலந்தூர் பகுதி சிமெண்ட் ரோடு, திருவள்ளுவர் தெரு , தரமணி, கொட்டிவாக்கம் பகுதிக்குட்பட்ட 3ஆவது லிங்க் தெரு, 2ஆவது பிரதான சாலை, 4ஆவது லிங்க் தெரு நேரு நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.   பின்னர் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.