திருவள்ளூர்,நவ.3- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சிறுபான்மை நல உரிமை பிரிவு அணியின் சார்பில் பழவேற்காட்டில் அஞ்சல் அட்டை மூலம்நீட் எதிர்ப்பு பதிவு பிரச்சாரம் வெள்ளியன்று (நவ 3), நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பழவை அ.முகமது அலவி ஏற்பாட்டில் நடைபெற்றது.இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பழவேற்காடு பெரிய பள்ளிவாசல்,கோட்டைக்குப்பம் ஊராட்சி ஜமீலாபாத் ஆகிய பகுதிகளில் நீட் விலக்கு நம் இலக்கு என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டஅஞ்சல் அட்டையின் மூலம் நீட்-க்கு எதிரான ஆதரவுகளை பதிவு செய்த அஞ்சல் அட்டையை பொது மக்களுக்கு மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந் தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி வழங்கினார். பின்னர் அங்கு வைக்கப்பட்ட திமுக அஞ்சல் பெட்டியில் கையெழுத்திட்டவர்கள் அட்டைகளை போட்டனர்.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செய லாளர் கதிரவன்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர்கள் எம்.கே.தமின்சா, வழக்கறிஞர் தங்கதேவன்,ஏ.கோ.விஜய் வின்சென்ட், ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.