districts

img

அஞ்சல், பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அஞ்சல் துறை, பிஎஸ்என்எல், பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. கோட்ட சங்க தலைவர் பி. முருகன் தலைமை ஏற்க, நிர்வாகத் தலைவர் ந. இராதாகிருட்டினன் கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட அஞ்சல் துறை சங்க நிர்வாகிகள்  சரவணன், ஆர். மணிகண்டன் பிரகாஷ்,  ரஞ்சித், எம். கணேசன்,  மகேந்திர நாயுடு, ராமசந்திரன்,    சந்திரன்,  ஜெயசந்திரன், பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.