கானகத்தில் பொங்கல் விளையாட்டு விழா
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஜன.12) கானகத்தில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
சின்மயாநகரில் பொங்கல் விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திங்களன்று (ஜன.13) சின்மயாநகரில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார்.
அயப்பாக்கத்தில் பொங்கல் விளையாட்டு விழா
மதுரவாயல் பாலர் பூங்கா சார்பில் ஞாயிறன்று (ஜன.12) அயப்பாக்கத்தில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.