சென்னை, ஏப்.19- சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் 16 இடங்களில் 1,461 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த சாவடி களில் உள்பட அனைத்து தேர்தல் அலு வலர்களும் பெண்களாகவே பணிய மர்த்தப்பட்டிருந்தனர். இந்த மையங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) கலரில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதையை உயர்த்தும் வகையில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் உரு வாக்கப்பட்டிருந்தன. பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி ஆர்.கே.நகர் பகுதியில் 30 பேர், பெரம்பூர் பகுதியில் 66 பேர், கொளத்தூர் பகுதியில் 49 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வில்லிவாக்கம் பகுதியில் 38 பேர், திரு.வி.க.நகரில் 21 பேர், எழும்பூரில் 48 பேர், ராயபுரத்தில் 40 பேர், துறைமுகத்தில் 18 பேர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 62 பேர், ஆயிரம்விளக்கில் 145 பேர், அண்ணாநகரில் 140 பேர், விருகம் பாக்கத்தில் 183 பேர், சைதாப்பேட்டையில் 158 பேர், தி.நகரில் 163 பேர், மயிலாப்பூரில் 187 பேர், வேளச்சேரியில் 113 பேர் என சட்ட மன்ற தொகுதி வாரியாக பெண் பணி யாளர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர் இந்த மையங்களில் கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக்குழந்தையுடன் வருப வர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது. இதை தவிர இங்கு பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. முதி யோர் ஓய்வு அறை மற்றும் உதவி மையம், குழந்தைகள் விளையாடும் இடம் சாய் தளங்கள் ஆகியவை இந்த மையங்களில் முறையாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. வினாடி வினாபோட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கியூ ஆர் குறியீடு கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை பொது மக்கள் ஸ்கேன் செய்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர்.