கிருஷ்ணகிரி, நவ.12- காவேரிப்பட்டினம் அருகே மலை யாண்ட அள்ளி ஊராட்சி அம்பேத்கர் காலனி யில் 65 ஆதி திராவிடர் குடும்பத்தினர். பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அங்கு சர்வே எண் 141 இல் உள்ள 1.5 ஏக்கர் சுடு காடு பல தலைமுறைகளாக தலித் குடும்பங்க ளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுடுகாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நில உரிமையாளரர் கணேசன் சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதுடன் ,இதுகுறித்து கேட்டால் சுடுகாடு நிலம் முழுவதும் எனக்கே சொந்தம் என கூறி வருகிறார். இதனால் புதைப்பதற்கு இட மில்லாமல் அம்பேத்கர் காலனி மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த மக்களின் குடியிருப்பு மற்றும் பயன்பாட்டு நிலமான 1.75 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் 75 சென்ட் நிலத்தை பலரும் ஆக்கிரமித்துக் கொண்டு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் . இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அம்பேத்கர் காலனியை சேர்ந்த மூர்த்தி,ராஜா உள்ளிட்ட பலர் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் கணேசன் ஆக்கிரமித்து வேலி அமைந்துள்ள சுடுகாட்டையும், அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் சர்வே எண் 142 இல் ஆக்கிரமித்துள்ள 75 சென்ட் இடத்தையும் மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து ஆய்வு செய்வதாக அரசு அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.