districts

img

கள்ளக்குறிச்சி எம்பி யிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை மனு

கள்ளக்குறிச்சி, டிச.2–  கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் தே.மலையரசனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வர்கள் சந்தித்தனர். அப்போது,கோரிக்கை மனு கொடுத்தனர்.  இதில்,5 கோடி  கரும்பு விவசாயிகளை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க வேண்டும். 1966 ஆம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் தொடர வேண்டும். ஒன்றிய அரசு, தற்போது 10.25 விழுக்காடு பிழித்திறன் உள்ள கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 3,151 -விலை நிர்ணயம் செய்துள்ளதை மாற்றி 9.5 விழுக்காடு பிழி திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,500 விலை அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசு சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விற்பனை செய்ய மாதம் மாதம் அளவு நிர்ணயம் செய்யும் முறை யில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புதுப்பித்து மேம்படுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ஒன்றிய வழங்கவும் மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வீ.ஸ்டாலின் மணி, பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாளர் எஸ்.ஜோதிராமன், தலைவர் ஜி.சாரங்க பாணி, கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலை செய லாளர் ஜி.அருள்தாஸ், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை செயலாளர் கே.பலராமன், தலைவர் கதிர்.கோபால், கச்சிராயபாளையம்  சர்க்கரை ஆலை தலை வர் கே.குருநாதன், செயலாளர் எம்.முகமது அலி ஆகி யோர் உடனிருந்தனர்.