திருவள்ளூர், டிச. 18- தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் புதனன்று (டிச 18), கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் தலைமையில் திருவள்ளூரில் கருத்த ரங்கம் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயலாளர் எம்.ஜம்பு வரவேற்றார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரராகவன் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலை வர் து.மகேந்திரன் வாழ்த்தி பேசினார். கூட்டமைப்பின் தலைவர்கள் ப.நா.மாசிலாமணி, சங்கரன், ஆர்.ஜெய ராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.வி.செந்தமிழ்செல்வன் கருத்துரை வழங்கினார். பொருளாளர் குப்பன் நன்றி கூறினார்.