districts

img

நெல்கொள்முதல் நிலையம் மயிலம் ஒன்றிய மாநாடு கோரிக்கை

விழுப்புரம், செப். 25- விழுப்புரம் மாவட்டம்,சிபிஎம் மயிலம் ஒன்றிய மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 24-வது  மயிலம் ஒன்றிய மாநாட்டில் மூத்த உறுப்பினர் ஆறுமுகம் கொடி யேற்றினார். கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய ஒன்றிய செயலாளராக டி.கெஜமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.  தீர்மானம் மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், மக்கள் பயன்படுத்த அடிப்படை வசதியான பொது கழிவறை அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினர்.