கடலூர்,மே 28-
கடலூர் போக்குவரத்து அரங்கத்தில் இடைக்குழு செயலாளராக பி. கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்க பேரவை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. போக்குவரத்து ஜான்விக்டர் தலைமை தாங்கினார்.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், அரங்க அமைப்பாளர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ஓய்வு பெறும் தொழி லாளர்களுக்கு ஓய்வு பெறும் அன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும், அனைத்து வழித்தடத்திலும் பேருந்து இயக்க வேண்டும் உன்னிடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் போக்குவரத்து அரங்க இடைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக பி.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.