புதுச்சேரி, பிப்.22- புதுச்சேரி தட்டாஞ்சாவடி அரசு அச்சக சாலை வழியாக கதிர்காமம்,இந்திரா நகர் தொகுதி மக்கள் நகரத்திற்கு சென்று வந்தனர். பல ஆண்டு காலமாக பொது போக்குவரத்து பயன்பாட்டில் இருந்த சாலையை தனியார் பெட்ரோல் நிலையத்திற்கு ஆதரவாக போக்குவரத்துறை திடீரென்று தடுப்பு வேலி களை கொண்டு அடைத்துவிட்டது. இச்சாலை அடைப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேப்போல், அப்பகுதியில் கூட்டுறவு பெட்ரோல் நிலை யத்தை விற்பனையும் பெருமளவில் சரிந்தது. இந்த பாதிப்புகள் குறித்து ‘தீக்கதிர்’ படத்து டன் பிப். 22 அன்று செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் சார்பில் பிப்.22 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மூடப்பட்டிருந்த தட்டாஞ் சாவடி அரசு அச்சக சாலையை உடனே காவல்துறையினர் திறந்துவிட்டனர். முதற் கட்டமாக, இரு சக்கர வாகனம் செல்லும் வகையில் ஒரு பகுதியில் வழி விட்டனர். ஆனால், மூன்று சக்கர,நான்கு சக்கர வாக னங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. இந்த சாலையை முழுமையாக திறந்து விட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி வலியுறுத்தியுள்ளார்.