சென்னை,அக்,7- சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்க ப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (அக்.7) திறந்து வைத்தார். பூங்கா வளாகத்தில் கலைஞரின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை யடுத்து பூங்காவினை முதல்வர் பார்வையிட்டார். இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள் ளன. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்ச ர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு, சேகர் பாபு, பொன்முடி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வ ராஜ், மக்களவை உறுப்பினர்கள் தயா நிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித் தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளி நாட்டுப் பறவைகளைப் பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திடப் பெரியவர்களுக்கு ரூ.150 சிறிய வர்களுக்கு - ரூ.75, எனவும், மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தைக் காணப் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு - ரூ.50 எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைப் பார்வையிடப் பெரிய வர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது