districts

img

பட்டா மாறுதலுக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

கள்ளக்குறிச்சி, ஜூலை 3 - பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய கிராம  நிர்வாக அலுவலர் கைது செய்யப் பட்டார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவாங்கூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சம்பத் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறுவாங்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் அதிரடி சோதனை செய்ததில் சிக்கினார். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரிடம் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.