districts

img

தியாகிகள் தினம் அனுசரிப்பு

கடலூர், ஜன. 19- தியாகிகள் தினத்தையொட்டி ஜன.19 அன்று கடலூரில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகம் எதிரே தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர்  பி.கருப்பையன் தலைமை தாங்கி னார். நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செய லாளர்  டி.பழனிவேல், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராயன், ஆளவந்தார், சங்கமேஸ்வரன், சாந்த குமாரி, திருமுருகன், தேசிங்கு, ராஜேஷ் கண்ணன், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் உத்திராபதி ஆகி யோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கி ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் வேலூர் மாவட்டத்தில் நேஷனல் சந்திப்பிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மண்டி வீதியை சென்றடைந்தது. அங்கு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகிகள் ஸ்தூபிக்கு வீரவணக்கம் செலுத்தினர். மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்தராஜ்,  மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், மாநகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், கே.சுவாமிநாதன் (விவசாயிகள் சங்கம்),  செ.ஏகலைவன்(விதொச) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.