ராணிப்பேட்டை,டிச. 30 - ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், நவ்லாக் ஊராட்சி மன்றம் 13 ஆவது வார்டு பகுதியில், தனியார் கேஸ் நிறு வனம் மூலம் குழாய் புதைக்கும் பணி களால் சாலைகள் சேதமடைகிறது. விபத்து கள் ஏற்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் வெள்ளியன்று (டிச. 29) மாதாந்திரக் கூட்டம் புறக்கணித்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பின ர்கள் கூறுகையில், “மாதந்திர கூட்டம் நடக்கும் போது ஒவ்வொரு முறையும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போராட்டம் நடத்தினோம் என்றனர்.