districts

img

வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி வெற்றிக்கு பணி

வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி வெற்றிக்கு பணியாற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயல்வீரர்கள் கூட்டம் பகுதிச்செயலாளர் அ.விஜயகுமார் தலைமை நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், திமுக வடக்கு பகுதி செயலாளர் அ.முருகன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வெற்றிராஜன் ஆகியோர் பேசினர். முன்னதாக ஜே.டேவிட் வரவேற்றார். வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்.