districts

img

2 மாதமாக சம்பளம் இல்லை: வாலாஜா துப்புரவு ஊழியர்கள் பரிதவிப்பு!

ராணிப்பேட்டை, ஜூன் 21- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  நகராட்சியில் 35 நிரந்தர துப்புரவு பணியாளர்க ளும், 80 ஒப்பந்த ஊழியர்களும், 30 டெங்கு  கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 145 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்  கப்படவில்லை பிஎப், கூட்டுறவு சொசைட்டி எல்ஐசி ஆகியவற்றுக்கு நகராட்சி நிர்வாகம்  கடந்த 21 மாதங்களாக பணம் செலுத்த வில்லை. இந்நிலையில் உடனடியாக நிலுவை ஊதி யத்தை வழங்கக் கோரி பணியை புறக் கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை துப்புரவு  தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏபி.எம்.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊதி யத்தை உடனடியாக வழங்குவதாகவும், பிஎப், எல்ஐசி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய தொகையை ஒரு வாரத்திற்குள் வங்கியில் செலுத்துவதாகும் தெரிவித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட் டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி, வேலு,  ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பாக்கியராஜ், சிவராமன் விசுவநாதன் மகளிர்  சுய உதவிக் குழு தலைவர்கள் சித்ரா, சீதா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;