districts

img

இந்தோ பிரெஞ்சு வடிவமைப்பில் சென்னையில் புதிய ஆடையகம்

இந்தோ  பிரெஞ்சு வடிவமைப்பில் சென்னையில் புதிய ஆடையகம்  சென்னை, நவ.10- பிரபல இந்தோ-பிரெஞ்சு பேஷன் பிராண்டான ஜீன்ஸ் லெகோனெட் ஹேமந்த், சென்னையில் தனது புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ  வணிக வளாகத்தில் 2வது தளத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த ஆடையகம் பாரிசியன் கலைத்திறனை இந்திய கைவினைத்திறனுடன் ஒருங்கிணைக்கும் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய பிரான்ஸ் கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் இருக்கும் என்றும் இங்கு ஆண்கள் பெண்கள் அனைவருக்குமான ஆடைகள் கிடைக்கும் என்றும்  ஜீன்ஸ் லெகோநெட் ஹேமந்தின் இணை நிறுவனர் டிடியர் லெகோனெட் கூறினார்.  சென்னை வளமான கலாச்சார பாரம்பரிமிக்க நகரம் என்றும் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டையும் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளை உருவாக்கி வருவதாக இணை நிறுவனர் ஹேமந்த் சாகர் கூறினார்.