districts

img

பாஜகவின் தொடர் தாக்குதலை கண்டித்து கடலூரில் சிறுபான்மை மக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை.21- ஒன்றியத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வட  மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிலர் படுகொலையும் செய்யப்பட்டு ள்ளனர். குடியிருப்புகள், கடைகளை புல்டோசர் மூலம் இடித்து வருகின்ற னர். இத்தகைய  கொடுஞ்செயலுக்கு காரணமான பாஜக ஆர்எஸ்எஸ் பரி வாரங்களை கண்டித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நிலைக்குழுவின் மாவட்டத் தலை வர் எஸ்.கே. பக்கிரான் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜி. ஆர். ரவிச்சந்திரன், சபி யுல்லா, அப்துல் காதர், மதியழகன், பெஞ்சமின் ராஜ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.  சிறுபான்மை நல குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வி. உதயகுமார், ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் வஹாப், கடலூர் பாஸ்டர் கிறிஸ்டோபர், மக்கள் ஒற்றுமை மேடையில் அமைப்பாளர் ஆர். அமர்நாத், தமுஎகச நிர்வாகி கவி ஞர் பால்கி, மாவட்ட துணைதலை வர்கள் ஏ. முகமது ஹலீம் ஜே.எம். ஜின்னா, அசன் முகமது, மன்சூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.