districts

img

சைதாப்பேட்டை மார்க்கெட்டில் அமைச்சர் ஆய்வு

சென்னை, செப். 7 - சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் ஒரு  நூற்றாண்டிற்கும் மேலாக இயங்கி வருகிறது. காய்கறி, பழம், மீன் கடைகள் என  பல நூறு கடைகள் செயல் படுகின்றன. காய்கறி, பழ கடைகள் அமைந்துள்ள பகுதி மாநகராட்சிக்கு சொந் தமான இடத்தில் உள்ளது.  பழமையான இந்த மார்க்கெட் கட்டிடங்கள் சிதிலமடைந்து மழைக் காலங்களில் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். இந்த மார்க்கெட்டை புதுப்பிக்க திட்ட மதிப்பீடு கள் தயாரிக்கவும், மறுசீர மைப்பு பணிகள் மேற்கொள் ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மார்க்கெட் தற்காலிகமாக ஏதேனும் ஒரு மைதானத்திற்கு இட மாற்றம் செய்யப்படும். பணி கள் நிறைவடைந்த பிறகு, தற்போதுள்ள வியாபாரிகள் அவரவர் வைத்துள்ள இடத்திற்கு ஏற்றார் போல் அதே அளவில் கடைகளை வழங்கப்படும். இந்த மார்க்கெட் பகுதி யில் நடைபாதை வியாபாரி களுக்கு நிரந்தரமாக சிறு  கடைகள் கட்டி வழங்கப் பட்டது. அந்தக் கடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பயன்படாமல் உள்ளது. இந்த கடை களை அகற்றி விட்டு, அருகே உள்ள மாநகராட்சி  மகப்பேறு மருத்துவ மனையை விரிவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;