districts

img

தேரடி வீதியில் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து,  அமைச்சர் எ.வ.வேலு, தேரடி வீதி, காந்தி சிலை, சின்னக்கடைத் தெரு, ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில்  கடை, கடையாக சென்று வாக்குச் சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பாரி, வெற்றிச் செல்வன்(காங்),  இல.பாசறை.பாபு(மதிமுக), திக மூர்த்தி(திக),  இரா.தங்கராஜ், வே.முத்தையன்(சிபிஐ),  ச.நியூட்டன், ப.வளர்மதி(விசிக),  நவாப்ஜான்(முஸ்லீக்லீக்),  இரா.அருள்(மநீம),  எம்.கலிமுல்லா(மநேமக),  மல்லிவினோத்(தவாக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.