சென்னை, ஏப். 8- மாதவரம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என வேட்பாளர் கலாநிதி வீரா சாமி தெரிவித்தார். வடசென்னை மக்க ளவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் கலாநிதி வீராசாமி மணலி யில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசு கையில், எண்ணூர் பறக்கும் சாலை, விம்கோ நகரில் இருந்து எண்ணூர் மற்றும் மணலி வழியாக மாதவரத் திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க நடவடி க்கை மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான 12,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக் கீடு செய்துள்ளது. இப்படி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சித்து வருகிறது என்றார். இதில் சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர்கள் ஏ.வி.ஆறு முகம், தி.மு.தனியரசு, திமுக பகுதிச் செயலாளர் அருள் தாசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் டி.பாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி யினர் கலந்து கொண்டனர்.