மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு
சென்னை, ஜன. 9- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கு உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடக்கத்தில் இருந்தே வேலைவாய்ப்பில் பாலின சமத்து வத்தை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணி யாளர்களில் 21விழுக்காடு பெண்களும், வெளி ஒப்பந்தத் பணியாளர்களில் 50 விழுக்காடு பெண்களும் பணியாற்றி வரு கின்றனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கை யரையும் பணியமர்த்தியுள்ளது. 2ஆவது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்பு களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறி யாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, பொறியியல் பணி யாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்து வத்தை மேம்படுத்து வதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாடு என்று மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். தகுதிவாய்ந்த பெண் பொறியாளர்கள் இந்த தனித்துவமான வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2 வருட குறைந்தபட்ச அனுபவமும், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (தகுதி யான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்) மாதம் ரூ.62ஆயிரம் ஒருங்கிணைந்த ஊதியம் வழங்கப்படும். விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் இணையதளத்தில் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற URL இல் 10.1.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும். விண்ணப்பத்தை 10.2.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜன.15 இறைச்சி கடைகள் மூடல்
சென்னை, ஜன. 9- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும் புதனன்று (ஜன.15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் மூடப்படவுள்ளன.எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விதி மீறிய வாகனங்களுக்கு ரூ5.8 லட்சம் அபராதம்
சென்னை, ஜன. 9- மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், அதிக வேகம், அதிக பாரம், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டுவது, மது அருந்தி விட்டும், ஷீட் பெல்ட்’ அணியாமலும் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட விதிமுறை மீறிய 86 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அந்த வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ5.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
புழல் சிறை பெண் கைதி உயிரிழப்பு
சென்னை, ஜன. 9- சென்னை புழல் சிறையில் உடல் நலக்குறைவால் பெண் கைதி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் செல்ல பெருமாள் கோயில் நகரைச் சேர்ந்தவர் ராணி (66). இவர் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கில், கடந்த மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராணி, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து புழல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது
சென்னை, ஜன. 9- சென்னை தண்டையார்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநரை மதுப்பாட்டி லால் தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார் (33). இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மணலி செல்லும் மாநகர பேருந்தை சரத்குமார் புதன்கிழமை ஓட்டிச் சென்றார். அந்த பேருந்து தண்டையார்பேட்டை திரு வொற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது, அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிளை இடிப்பதுபோல் சென்றதாம். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், சரத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு முற்றவே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும், சரத்குமாரை தாங்கள் வைத்திருந்த மதுப்பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் பேருந்து கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது திருவான்மியூரைச் சேர்ந்த ராக்கி (எ) ராகேஷ் (27), புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த அசோக் (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் நிஸார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிண்டிகேட் முறையை ஒழிக்க நேரடி நெல் கொள்முதல் நிலையம் அவசியம்
விழுப்புரம், ஜன.9- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, வியாபாரிகளின் சிண்டி கேட் முறையை ஒழிக்க அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடி யாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் விடுத்துள்ள அறிக்கை யில், விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கக் கூடிய மக்களில் பெரும்பகுதியினர் விவ சாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரு கின்றனர், வேற எந்த தொழிற்சாலை யும் இந்த மாவட்டத்தில் இல்லை, சிறு, குறு விவசாயிகள் 95 சதவீதம் விவ சாயிகள் மாவட்டத்தில் விவசாயம் செய்கின்றனர். நெல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் விழுப்புரம் மாவட்டம் பெஞ்சால் புயல் மழைக்கு பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் பயிர் செய்த நெல்லை அறுவடை செய்து வருகின்றனர். இந்த இயற்கை சீற்றம் காரணமாக உற்பத்தி இலக்கு குறைந்துள்ள போதிலும் தாங்கள் விளைவித்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 கொள்முதல் செய்யப்படுகிறது.ஏலமுறையில் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிற நிலை தற்சமயம் உருவாகியிருக்கிறது. ஒரு புறம் விவசாயிகள் தாங்கள் விளை விக்கிற வேளாண் விலை பொருள்க ளுக்கு எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டி யின் பரிந்துரையின் அடிப்படையில் விலை வழங்க வேண்டும், அந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் மறுபுறம் விவசாயிகள் இப்படிப்பட்ட விலை வீழ்ச்சியால் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த விலையாவது விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவே வேளாண் ஒழுங்குமுறை கூடங்களில் சிண்டிகேட் முறையில் நடைபெறும் முறைகேட்டை தடுத்து நிறுத்திடவும் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போலவே அதே இடங்க ளில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை உடனடியாக துவக்க வேண்டும், விவசாயிகளின் ஆலோசனைப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அரசு நிர்ணயித்த விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கூடுதலாக உயர் சன்னரக பொன்னி, பாபட்ல(பிபிடி) உள்ளிட்ட நெல்களுக்கு கூடுதல் விலையை நிர்ணயம் செய்து அந்த ரகங்களையும் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட குழு கேட்டுக்கொண்டுள்ளது.